×

எல்லைக்குள் அத்துமீறல் சீனா டிரோன்களை விரட்டிய தைவான்

தைபே: தைவானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, தைவானை தனி நாடாக அங்கீகரிக்க முயற்சிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் ஆத்திரத்தை தூண்டும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தைவான் சென்றார். இதனால், தைவான் ஜலசந்தி பகுதியில் சீன ராணுவம் கூட்டு போர் பயிற்சி நடத்தியது. இதனிடையே, அமெரிக்காவின் 2 ஏவுகணை தாங்கி போர் கப்பல்கள் கடந்த 28ம் தேதி தைவான் ஜலசந்தி பகுதி வழியாக கடந்து சென்றது. இந்நிலையில், சீனாவில் இருந்து தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற டிரோன்களை தைவான் அரசு விரட்டி அடித்து உள்ளது. தைவான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘கின்மென் தீவுகள் மீது சீனாவின் டிரோன்கள் பறந்தன. அவற்றை எச்சரிக்கும் வகையில், முதலில் வானை நோக்கி சுடப்பட்டது. அதன் பிறகும் அவை தைவான் எல்லையை சுற்றி வந்ததால், அவற்றை நோக்கி நேரடியாக சுட நேரிட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தியதும், அந்த டிரோன்கள் சீனாவின் எல்லைக்குள் சென்று விட்டன,’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Taiwan ,China , Taiwan repels China drones for trespassing
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...