மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

சென்னை: ‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’ உள்பட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் ‘சைரன்’ என்ற படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் அவர் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார்.  ஆண்டனி பாக்யராஜ் கூறுகையில், ‘நான் இயக்கும் ‘சைரன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹீரோ ஜெயம் ரவிக்கு நிகரான கேரக்டர் என்றாலும்,  ஜெயம் ரவிக்கு அவர் ஜோடி இல்லை. கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்’ என்றார்.

Related Stories: