×

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: சுமன் எச்சரிக்கை

ஐதராபாத்: தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்து வருபவர், சுமன். கோலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகள் உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்தி பரவுவது போல், நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமன் பற்றி வதந்தி பரவியது. இதையறிந்து ஆவேசம் அடைந்த சுமன், பிறகு அளித்துள்ள விளக்கம் வருமாறு:  என் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருகிறது. இதை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ரசிகர்கள் இதை நம்ப வேண்டாம். என்னை தொடர்புகொண்டு நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி. தற்போது நான் பெங்களூருவில் நடக்கும் கன்னடப் பட ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். மற்றபடி என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பினால், சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று எச்சரிக்கிறேன்.



Tags : Suman , Legal action against spreading rumours: Suman Warning
× RELATED 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்து கொண்டு...