×

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பது எப்போது?

சென்னை: தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கான பேச்சு
வார்த்தை தொடங்கியுள்ளது.

தற்போது காமெடி நடிகர் சூரி ஹீரோவாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், இதில் விஜய் சேதுபதியை ஆசிரியர் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கும் வெற்றிமாறன், இதன் ஷூட்டிங்கை முடித்த பிறகே புதிய படத்தைப் பற்றி அறிவிக்கிறார். அப்படம் விஜய் நடிக்கும் படமாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ‘வாடிவாசல்’ படத்தை முடித்த பிறகு ‘விடுதலை’ படத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கே அடுத்த படத்தை இயக்குவார் என்றும், இப்படத்துக்குப் பிறகுதான் அவர் விஜய்யை இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுபற்றி இருவர் தரப்பும் எதுவும் சொன்னது இல்லை.

இந்நிலையில், கடந்த வாரம் தனது டிவிட்டரில் உள்ள தனது கணக்கை நீக்கியுள்ளார் வெற்றிமாறன். பொதுவாக சினிமா மற்றும் இலக்கிய மேடைகளில் அதிக நேரம் பேசும் வழக்கம் கொண்ட அவர், சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவது இல்லை. இதுநாள்வரை அவரது பெயரில் இயங்கி வந்த டிவிட்டர் கணக்கையும் அவர் பயன்படுத்தியது இல்லை என்பதால், நிரந்தரமாக சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Vetrimaran , When will Vijay act in Vetrimaran's direction?
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...