×

காட்பாடி, வேலூர், திருவண்ணாமலையில் வேளாங்கண்ணி சிறப்பு ரயில் நின்றுசெல்ல ஏற்பாடு

வேலூர் : செகந்திரபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி, வேலூர், திருவண்ணாமலையில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் 8ம் தேதி வரை திருவிழா நடைபெறும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக செகந்திரபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செகந்திரபாத்தில் இருந்து வரும் 4ம் தேதி, 8ம் தேதிகளில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

 இதேபோல், வேளாங்கண்ணியில் இருந்து 5, 9ம் தேதிகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, 2ம் நாள் அதிகாலை 3.35 மணிக்கு செகந்திரபாத் சென்றடைகிறது.  இந்த சிறப்பு ரயில் நல்கொண்டா, மிரியாலகுடா, நடிகுடி, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Velankanni ,Katpadi ,Vellore ,Tiruvannamalai , Velankanni, Secundrabad, Tiruvannamalai, katpadi, Vellore, Special train
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி