அமெரிக்காவில் அமிதாப் பச்சனுக்கு சிலை வைத்த ரசிகர்

மும்பை: அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் வசித்து வருபவர், குஜராத்தை சேர்ந்த சேத். அங்கு இவர் 30 வருடங்களாக பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகரான இவர், அமெரிக்காவில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கு முன்புறம் அமிதாப் பச்சனுக்கு முழு உருவச் சிலை வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கும், என் மனைவிக்கும் அமிதாப் பச்சன் கடவுள் போன்றவர்.

நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரது கருத்து களைப் பின்பற்றியே எங்கள் வாழ்க்கையில் உயர்ந்ேதாம். அதனால்தான் அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்தோம். ராஜஸ்தானில் செய்யப்பட்ட சிலையை கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு வந்தேன். இதற்காக 60 லட்ச ரூபாய் செலவானது. சிலை வைத்துள்ளது குறித்து அமிதாப் பச்சனுக்கு தெரிவித்தேன். உடனே அவர், ‘இதற்கு எல்லாம் நான் தகுதி உள்ளவன் கிடையாது’ என்று தன்னடக்கத்துடன் சொன்னார்.

Related Stories: