×

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை விர்... கனகாம்பரம், காட்டுமல்லி 1000 ரூபாய்க்கு விற்பனை.!

அண்ணாநகர்: விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலை மற்றும் பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விநாயகருக்கு பயன்படுத்தப்படும் பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. விநாயகருக்கு படைக்கப்படும் கரும்பு, சோளம், தேங்காய், கம்பு, பூசணிக்காய், மஞ்சள், பேரிக்காய், கொய்யா, பொரி மற்றும் தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இவற்றை சென்னை புறநகர் பகுதியில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். பழம் மார்க்கெட்டில் விளாக்காய், கொய்யா பழங்கள் அதிகளவில் குவிந்துள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று மல்லி 600, கனகாம்பரம் 900க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிமல்லி 600, முல்லை 700, அரளி 300, சம்பங்கி 300, சாமந்தி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாக்லெட் ரோஸ் 200, பன்னீர் ரோஸ் 150, மஞ்சள் ரோஸ் 220, தவணம் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூ வியாபாரி பாலமுருகன் கூறும்போது, ‘நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் மார்க்கெட்டில் பூக்களின் வியாபாரம் களைகட்டியுள்ளது. பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று விற்பனை செய்யப்பட்டதைவிட இன்று ஒரு மடங்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை உயர்ந்தாலும் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சில்லரை வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பூக்களின் விலை உயர்வு ஒருசில நாட்கள் நீடிக்கலாம் என்று தெரிகிறது’’ என்றார்.

Tags : Ganesha Chaturthi ,Koyambedu market ,Kanakambaram ,Kattumalli , Ganesha Chaturthi celebration tomorrow; The price of flowers in Koyambedu market... Kanakambaram, Kattamalli selling for 1000 rupees.!
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு