×

விநாயகர் சதுர்த்தி விடுமுறை எதிரொலி: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு..பயணிகள் அதிர்ச்சி..!!

சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 31ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இன்று மாலையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள தொடங்குவார்கள். அத்துடன் சென்னையில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பியுள்ளது. அதனால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.800 ஆக இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ.1,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவைக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.1,400 கட்டணமாக வசூலித்த நிலையில், தற்போது ரூ.2,500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விடுமுறையை ஒட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Vinayakar Chaturdhi , Vinayagar Chaturthi, Omni Bus, Fare, Fare
× RELATED விநாயகர் சதுர்த்தி விடுமுறை எதிரொலி...