கசப்பான அனுபவங்கள் எதிரொலி!: ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை நிராகரித்தார் கிறிஸ் ராக்..!!

கலிபோர்னியா: ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை க்ரிஸ் ராக் நிராகரித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு முதல்முறையாக கிடைத்தது. கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவியை, தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசினார்.

அப்போது வில் ஸ்மித் மனைவியின் தலைமுடியை கிறிஸ் ராக் விமர்சனம் செய்தார். அதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் உலகளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு நடிகர் வில் ஸ்மித் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருது நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு மீண்டும் கிறிஸ் ராக்கிற்கு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த முறை நடைபெற்ற கசப்பான அனுபவங்கள் எதிரொலியாக ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

Related Stories: