×

பிரபல நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: ஆண் நண்பரை கைது செய்தது தனிப்படை போலீஸ்

விழுப்புரம்: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பரை விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிரபல நடிகையான அமலாபால் கடந்த 2018ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோனில் அருகே பெரியமுதலியார் சாவடி என்ற பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி, அதில் தங்கியுள்ளார். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த படத்தயாரிப்பாளரான பவ்நிந்தர் சிங் என்ற ஆண் நண்பர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அமலாபால் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆண் நண்பர் தன்னை ஏமாற்றி பணமோசடி செய்வதாகவும், தன்னை மிரட்டி உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த ஆண் நண்பரை விழுப்புர மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவமானது கடந்த 2018ல் இருந்தே நடைபெற்று வருவதாக, 16 பக்கங்கள் கொண்ட புகார்கள் விழுப்புரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் மேலும் 11 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.   


Tags : Amala Bal , Actress Amala Pal, Sexual Harassment, Boyfriend, Arrest, Private Police
× RELATED சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில்...