×

தொடர்மழையால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு... தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதி

விழுப்புரம்: தொடர்மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர்- அரகண்டநல்லூர் கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை இணைக்கும் தரைப்பாலம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருக்கோவிலூர் வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வெளியேற்றபடுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் ஆந்திர மாநில வனப்பகுதிகள் மற்றும் திருப்பத்தூரில் கடந்த 5 நாட்களாக தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்பூர் அடுத்த பச்சைக்குப்பம் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆம்பூரில் இருந்து அழிஞ்சிக்குப்பம், மேல்வைதனக்குப்பம், மேல்பட்டி, கடாம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : South Nine river , Continuity, South Pennai River, Flooding, Land Bridge, Avadi
× RELATED வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணகிரி...