×

சென்னை அண்ணா பல்கலை.யில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் 21 பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் நூற்றுக்கணக்கான இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வித்துறையின் காலமாக இந்த ஆட்சி இருக்க வேண்டும் என பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் ஒருபகுதியாக பல்கலைக்கழக துணைவேந்தர்களின்  மாநாடு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அலுவலர்கள், மாநில கொள்கை குழு தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல், பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பாடத்திட்ட மாற்றம், அரசு கலை கல்லூரிகளில் இடங்களை அதிகரித்தல், மாநில கல்வி கொள்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,M.K.Stalin ,University Vice ,Chancellors ,Conference ,Anna University ,Chennai , Chennai Anna University, Vice-Chancellors' Conference, M.K.Stalin
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்