×

மதுரா ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7 மாத குழந்தை பாஜக நகராட்சி தலைவர் வீட்டில் இருந்து மீட்பு: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 7 மாத குழந்தை அம்மாநில பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் கடந்த வாரம் செவ்வாய்கிழமை இரவில் ரயில் நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று தாயுடன் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு மிடுக்காக உடை அணிந்து வந்த நபர் ஒருவர், அக்கம்பக்கத்தில் நோக்கமிட்டபடி அந்த குழந்தையை தூக்கி சென்றார்.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மதுரா ரயில் நிலையத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ரிசோவ் பாக் மாவட்டத்தில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த நகராட்சி தலைவரின் வீட்டில் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர்.

ஹத்ராஸ் அருகே மருத்துவமனை நடத்தி வரும் 2 மருத்துவர்கள், குழந்தை கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த கும்பலிடம் இருந்து பாஜக நிர்வாகி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை வாங்கியுள்ளார். குழந்தையை கடத்தி சென்றவர் மற்றும் மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உத்திரப்பிரதேச போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


Tags : Mathura ,station ,BJP , Mathura railway station, child, rescue, doctors, arrest
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...