மொய்விருந்தை அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார்: டிடிவி தினகரன் கண்டனம்

தஞ்சாவூர்: பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் மொய்விருந்து நிகழ்ச்சியை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாக டிடிவி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று அளித்த பேட்டி: நடந்தது அனைத்தையும் மறந்து நல்லதை நினைத்து செயல்படுவோம். ஒரே கட்சியில் சேர வேண்டிய அவசியமில்லை, ஓ.பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என்றும் சொல்லவில்லை. இணைந்து என அவர் சொல்வது அவரவர் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும் என்றுதான் அர்த்தம். பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் நீண்ட நாளாக இருந்து வரும் மொய்விருந்து நிகழ்ச்சியை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார். அவர் சொல்வது தவறு. மொய் விருந்து என்பது வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத்தூக்கிவிடுவது. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவருக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: