சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5வது நாளாக நகைகள் சரிபார்ப்பு ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5 வது நாளாக நகைகள் சரிபார்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமிகளுக்கு சொந்தமான நகைகள் அனைத்தும் முதன் முதலாக 1955ம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் சரிபார்ப்பு ஆய்வு நடந்த நிலையில், கடைசியாக 2005ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற வாரம் 22ம் தேதி மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு பணியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஐந்தாவது நாளாக இந்து சமய அறநிலையத்துறையினர் மாவட்ட துணை ஆணையர்கள் ஜோதி (கடலூர்), குமரேசன் (திருவண்ணாமலை), சிவலிங்கம் (விழுப்புரம்) மற்றும் நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் 3 பேர் என ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று நடராஜர் கோயிலுக்கு வந்தனர். அவர்களைக் கோயில் தீட்சிதர்கள் கோயிலுக்குள் அமர வைத்து நகைகளின் கணக்குகளை காண்பித்தனர்.

Related Stories: