வில்லிவாக்கம், சோழவரம், புழல், செயின்ட் தாமஸ் மலை ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: வில்லிவாக்கம் வடக்கு, சோழவரம் தெற்கு, புழல், வில்லிவாக்கம் தெற்கு, செயின்ட் தாமஸ் மலை தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொது தேர்தலுக்கான ஒன்றியக் கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அறிவிக்கப்படுகின்றனர். அதன்படி சென்னை வடகிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவராக பொ.ஏழுமலை, செயலாளராக ஜி.தயாளன், துணை செயலாளர்களாக ஏ.ராமதாஸ் (எ) தாஸ், ஜி.தயாநிதி, மா.தேவிமாரி, பொருளாளராக அ.சிவானந்தம், மாவட்ட பிரநிதிநிதிகளாக அ.பிரபாகரன், வி.பி.அண்ணாதுரை, பொன்.மதுரை முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக அ.காசிமுகம்மது, செயலாளராக வே.கருணாகரன், துணை செயலாளர்களாக எம்.துரைவேல், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளராக செ.அரசு, மாவட்ட பிரதிநிதியாக ரா.விஜயன், ப.சேகர், பொன்.கோதண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புழல் ஒன்றிய அவைத்தலைவராக ர.செல்வமணி, செயலாளராக பெ.சரவணன், துணை செயலாளர்களாக ஆர்.முருகன், எம்.அண்ணாதுரை, இ.ராஜேஸ்வரி, பொருளாளராக ஆர்.வெங்கடேசன், மாவட்ட பிரநிதிகளாக ச.அற்புதராஜ், நா.ஜெகதீசன், எம்.ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை தெற்கு மாவட்டம் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக ஜெயச்சந்திரன், செயலாளராக அ.ம.துரை வீரமணி, துணை செயலாளர்களாக எ.எம்.யுவராஜா, ரா.கவுரிசங்கர், பா.கிரிஜா, பொருளாளராக என்.ரவி, மாவட்ட பிரதிநிதிகளாக கா.சங்கர், எஸ்.மாறன்குமார், கு.சதீஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

செயின்ட் தாமஸ் மலை தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக எஸ்.ரவி, செயலாளராக ஜி.வெங்கடேசன், துணை செயலாளர்களாக ஜெ.டி.மனோநிதி, எச்.டி.போஸ், சமாதானம், பொருளாளராக த.டில்லிபாபு, மாவட்ட பிரநிதிகளாக ஜி.எம்.ஏழுமலை, ஆர்.சொக்கலிங்கம், கே.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியம், கொடுமுடி வடக்கு ஒன்றியம், நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், பிரதிநிதிகள் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: