டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு; நடிகர் கண் தானம்

சென்னை: கண் பராமரிப்பு சிகிச்சையில் கடந்த 1957ம் ஆண்டிலிருந்து உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் புதிய கிளை குரோம்பேட்டையில் நேற்று துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ஜி.ராவ் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, குரோம்பேட்டை மற்றும் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கிளையில் செப்டம்பர் 30ம் தேதி வரை மக்களுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கண் தானம் செய்வதாக அறிவித்து அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  நமது உடலில் மிக முக்கியமான, அதிக வளர்ச்சி பெற்ற புலனுறுப்பாக இருப்பது நமது கண்களே. ஆனால், பார்வைத்திறன் இழந்தவர்களாக இருப்பதால் இந்த அழகான உலகையும், இயற்கை அதிசயத்தையும் காண்பதற்கான தங்களது வாய்ப்பை பல நபர்கள் இழந்து தவிக்கின்றனர். எனினும், இறப்புக்குப் பிறகு நமது கண்களை தானமாக வழங்குவதன் மூலம், பார்வைத்திறனின்றி பரிதவிக்கும் அவர்களுக்கு பார்வைத்திறனை வழங்குவது சாத்தியம்.

ஆகவே, தங்களது கண்களை இறப்பிற்கு பிறகு தானமாக வழங்க ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு முன்வந்து அதற்கான வாக்குறுதியை வழங்க வேண்டும்.

யாரோ ஒருவரது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க உதவுவதற்கு இந்த உன்னதமான செயல் உதவும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே கண்களை தானமாக வழங்கும் எண்ணம் இருந்து வந்தது. அதற்கான தக்க தருனம் இந்த கண் மருத்துவமனையின் திறப்பு விழாவில் நிறைவேறிவுள்ளது. மாணவர்கள் அனைவரும் தங்களின் நண்பருடன் இனைந்து கண்களை தானம் செய்வதற்க்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: