ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகர திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் தேர்வு; துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மாநகர திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக 15வது பொதுத்தேர்தலில் மாவட்டத்திற்குட்பட்ட மாநகர தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் விவரங்கள் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மத்திய மாநகரம் ஆவடி மாநகரம் அவைத்தலைவராக சண்.பிரகாஷ், செயலாளராக எஸ்.என்.ஆசிம்ராஜா, துணை செயலாளர்களாக வீ.சிங்காரம், கு.சேகர், ச.மகேஸ்வரி, பொருளாளராக ஜி.உதயகுமார், மாவட்ட பிரதிநிதியாக ஆ.ேஜான்ஸ், மேன்யல், சை.அபீப், எம்.ஜம்பு, இ.காண்டீபன், வே.ஹரி, சி.ஜெகந்நாதன், வி.சரத்குமார், பெ.வினோத், லோ.சரவணன், உ.நரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் அவைத்தலைவர் கோ.காமராஜ், செயலாளராக எஸ்.ஆர்.ராஜா, துணை செயலாளர்களாக ரா.நரேஷ்கண்ணா, பி.சதாசிவம், கே.வசந்தகுமாரி, பொருளாளராக வ.விஜயரங்கன், மாவட்ட பிரநிதியாக எஸ்.கே.நெப்போலியன், மு.ஆதிமாறன், ஆர்.எஸ்.சங்கர், கே.தேவேந்திரன், பா.டில்லி, மு.நாகலிங்கம், க.ரமேஷ், ஆர்.தாமோதரன், கே.தனசேகரன், த.ராஜாராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்  காஞ்சிபுரம் மாநகரம் அவைத்தலைவராக கே.ஏ.செங்குட்டுவன், செயலாளராக சி.கே.வி.தமிழ்ச்செல்வன், துணை செயலாளர்களாக எ.எஸ்.முத்துசெல்வம், வ.ஜெகன்நாதன், பி.நிர்மலா, பொருளாளராக கு.சுப்பராயன், மாவட்ட பிரநிதிகிளாக எஸ்.சுகுமாரன், த.விஸ்வநாதன், ப.சுரேஷ், பி.சங்கர், எஸ்.ரவிக்குமார், ஜெ.வரதராஜன், அ.பாலமுருகன், எஸ்.வி.பிரகாஷ், எஸ்.சேகர், எஸ்.மாமல்லன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்  திண்டுக்கல் மாநகரம்,  வேலூர் மத்திய மாவட்டம் வேலூர் மாநகரம், கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் மாநகரகம், தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பக்கோணம் மாநகரம், தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை, திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகரம், திருச்சி மத்திய மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகரம், கரூர் மாவட்டம் கரூர் மாநகரம், சேலம் மத்திய மாவட்டம் சேலம் மாநகரம்,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம், திருப்பூர் மத்திய மாவட்டம் திருப்பூர் வடக்கு மாநகரம், திருப்பூர் மத்திய மாவட்டம் திருப்பூர் தெற்கு மாநகரம், ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு மாநகரம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகரம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி மாநகரம், திருநெல்வேலி மத்திய மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் நிர்வாகிகளும், பிரநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: