ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு: போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பான வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு போலீஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரவாயல் கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசினார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து,  கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ்  பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  செப்டம்பர் 1ம் தேதி தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: