நிர்வாண போஸ் விவகாரம் போலீசாரிடம் ரன்வீர் சிங் 2 மணி நேரம் வாக்குமூலம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்காக எடுக்கப்பட்ட தனது நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். போட்டோக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ரன்வீர் சிங் மீது மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் ரன்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து ரன்வீர் சிங் நேற்று காலை 7 மணிக்கு போலீசார் முன்பு ஆஜரானார். பிறகு 9 மணி வரை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அவர், 9.30 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரன்வீர் சிங் மீது ஏற்கனவே

எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால் ரன்வீர் சிங்கை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம்’என்றார்.

Related Stories: