×

ஜப்பானில் ரிலீசாகும் அபர்ணா படம்

திருவனந்தபுரம்: தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்திருந்தவர், மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த 2019 பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘சர்வம் தாளமயம்’. ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினீத், குமரவேல் நடித்திருந்தனர். இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார்.

தற்போது இந்தப் படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப் பட்டு திரைக்கு கொண்டு வரப்படு கிறது. அதை இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டு
உள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி ஜப்பான் மொழியில் படம் வெளியாகிறது. இதுகுறித்த புரமோஷன் நிகழ்ச்சி ஜப்பானில் நடக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி,  ராஜீவ் மேனன் கலந்துகொள்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் செல்வது குறித்து உறுதியாகவில்லை.

Tags : Aparna ,Japan , Aparna is releasing in Japan
× RELATED திருமணத்துக்கு பிறகு அபர்ணா தாஸ் நடிப்புக்கு முழுக்கா?