போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த கால அளவு 3 ஆண்டுகளாக இருந்து வந்ததை, தற்பொழுது 4 ஆண்டுகளாக மாற்றி அமைத்துள்ளனர். இதை அனைத்து தொழிற்சங்கங்களுமே ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளாளர்களிடம் இருந்தும், தொழிற்சங்கங்களிடம் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இவற்றை உரிய முறையில் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: