×

பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்குள் நுழையும் அமெரிக்க டிரோன்கள்; தலிபான் குற்றச்சாட்டு

காபுல்: பாகிஸ்தான் வழியாகவே அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதாக தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தான் உடனான எல்லை பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதி அமெரிக்கா நடத்திய திடீர் டிரோன் தாக்குதலில் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனின் முக்கிய கூட்டாளியான அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்.  

இந்நிலையில், ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் முஜாஹித் இது குறித்து கூறுகையில், ‘’அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கிறது. எனவே, அமெரிக்க டிரோன்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகின்றன,’’என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவின் டிரோன்களுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு, அமெரிக்க டிரோன்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதே நேரம், தீவிரவாதம் எந்த வகையை சார்ந்ததாக இருந்தாலும் அவற்றை ஒழிக்க, தடுக்க பாகிஸ்தான் தூதரக அளவில் ஒத்துழைக்கும்,’’என்று தெரியப்படுத்தினார்.

Tags : US ,Afghanistan ,Pakistan ,Taliban , US drones entering Afghanistan via Pakistan; The Taliban charge
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!