பழைய பாசத்தில் பேசும் தம்பிக்கு சொல்றேன்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு டிடிவி தினகரன் அறிவுரை..!!

சென்னை: கடந்த கால கசப்புணர்வா? அல்லது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், நம் அம்மா ஜெயலலிதா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றினைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு நிராகரித்த நிலையில், டிடிவி தினகரன் வரவேற்றிருந்தார். இதனிடையே உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வதை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் நேற்று ஓபிஎஸ்-சை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டி டி வி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த,  பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழி. தினகரனை ஜெயலலிதாவிடம் இருந்து ஒதுக்கி வைத்ததே ஓ.பிஎஸ் தான் என கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த கால கசப்புணர்வா? அல்லது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், நம் அம்மா ஜெயலலிதா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை அண்ணன் டிடிவி என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தான் சொல்லும் அறிவுரை என தெரிவித்துள்ளார்.

Related Stories: