அனைத்து வீரர்களும் அசத்தினர் கேப்டன் ரோஹித் பாராட்டு

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது எப்படி என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ``இந்த இலக்கை விரட்ட முடியும் என்ற நம்பிக்கை முதலிலேயே இருந்தது. அதற்கு தகுந்த பலன் கிடைத்தது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பணிகள் கொடுத்திருந்தேன். அதனை அனைவரும் புரிந்துகொண்டு அசத்தினர். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த ஓராண்டாக செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. அமீரக மைதானங்களை புரிந்துக்கொண்டுள்ளனர்’’ என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், ``நாங்கள் ஆட்டத்தை தொடங்கிய விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இருப்பினும் எங்கள் பந்துவீச்சாளர்கள் இப்போட்டியில் மிகச்சிறப்பாக இந்தியாவுடன் போராடினர். கடைசியாக ஆடிய வீரர்களும் ரன்களை குவித்தனர். நவாஸை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றது அழுத்தத்தை அதிகரிப்பதற்காகதான். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அதனை முறியடித்துவிட்டார்’’ என்றார்.

Related Stories: