×

ஆஸ்கரை மிஞ்சும் அளவுக்கு நடிகர் ஓ.பி.எஸ் மட்டும் நடிக்க போயிருந்தா ரஜினி, சிவாஜிலாம் தோத்துருப்பாங்க

சென்னை: ஆஸ்கரை மிஞ்சும் அளவுக்கு நடிகர் ஓ.பன்னீர்செல்வம். அவர் நடிக்கப் போய் இருந்தால் ரஜினி, சிவாஜி தோற்றுப் போய் இருப்பார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானத்தில் மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதோடு வீரர்களுடன் கால்பந்தாடி மகிழ்ந்தார். பிறகு அவர் அளித்த பேட்டி: உசிலம்பட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் பக்கம் இணைந்தது அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரிடம் அதிக பணம் உள்ளது. மூவரும் பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை தான் செய்து வருகின்றனர். பணம் பாதாளம் வரை பாயும் என்ற வேலையைதான் தற்போது அவர்கள் செய்து வருகின்றனர்.

ஆஸ்கரை மிஞ்சும் நடிகர் ஓ.பன்னீர்செல்வம். அவர் நடிக்கப் போய் இருந்தால் ரஜினி, சிவாஜி தோற்றுப் போய் இருப்பார்கள். ஜெயலலிதா ஆட்சியை கவுக்க நினைத்த துரோகியை எப்பொழுதும் மன்னிக்க மாட்டோம். ஓபிஎஸ்ஐ எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை எப்பொழுதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள முடியாது. கரந்த பால் மடியில் ஏறாது, கருவாடு மீன் ஆகாது. அதிமுக தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ கிடையாது. இது தொண்டர்களை நம்பி உள்ள கட்சி. ஓ.பன்னீர்செல்வம் என்ன ஐநா சபை தலைவரா அவரால் எந்த தாக்கமும் ஏற்படாது. ஓபிஎஸ் மேற்கொள்ள உள்ளது புரட்சி பயணம் அல்ல, மிரட்சி பயணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Rajini ,Sivajilam ,OPS , Oscar, OPS, Rajini, Sivajilam Thothruppanka
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி