×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசு குறைந்துள்ளது. நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டை விலையில் மாற்றம் செய்தார். அதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில், 15 காசுகள் குறைத்து 415 காசாக நிர்ணயம் செய்தார். மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைந்து வருவதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப் பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 30 முதல் 40 காசுகள் வரை பண்ணையாளர்கள் குறைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.


Tags : Namakkal Mandal , In Namakkal Mandal, the price of eggs decreased by 15 paise
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...