11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்: ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: சென்னையில் திட்டமிட்டப்படி வருகிற 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அறித்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.முனியாண்டி வெளியிட்ட அறிக்கை:சட்டத்திற்கு புறம்பாக மறைக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

பட்டியல் இனத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் குறிப்பாக அனைத்து பெண் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகை மாநில நிதி குழு மானியம்  ஜீரோ பேலன்ஸ் இல்லாமல் 6வது நிதிகுழு மானிய அடிப்படையில் மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். 100 நாள் பணி திட்டத்தில் வேலைகளுக்கான ஓர்க் ஆர்டர்களை ஊராட்சி மன்ற தலைவர்களே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு செயல் அலுவலர் தகுதிக்கான மாத ஊதியம் ரூ30,000 ஆயிரமும், ஓய்வூதியமாக மாதம் ரூ.10.000 ஆயிரமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகமும் கிராம சபையும் சுதந்திரமாக தீர்மானங்கள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 14ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை  நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: