×

டெல்லியில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற பிரதான கட்டிட பணி முடிந்தது; டாடா நிறுவனம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது என்றும்  தற்போது உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினாயக் பை தெரிவித்தார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக, பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர்  மோடி அடிக்கல் நாட்டினார். இதில் எம்பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. ஒன்றிய  அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், கட்டுமான பணிகளை செய்து வரும் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான வினாயக் பை நேற்று கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிட பணி முடிந்து விட்டது. தற்போது உள் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிட கலைஞர்களால் நன்றாக சிந்தித்து இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. என தெரிவித்தார்.
அடுத்த குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : New Delhi Parliament Building ,Tata Company , New Delhi Parliament Building completed; Tata Company Information
× RELATED ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு