தமிழில் வெளியாகும் நயன்தாராவின் மலையாள படம்

சென்னை: பிரேமம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன் நேரம் என்ற படத்தை இயக்கினார், அல்போன்ஸ் புத்ரன். அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு அவர் இயக்கி உள்ள படம் கோல்ட்.

இந்த படத்தை பிருத்விராஜ் தயாரித்து, நடிக்கிறார்.  அவருடன் நயன்தாாரா, லாலு அலெக்ஸ், தீப்தி சதி, ரோஷன் மேத்யூ, சைஜு குருப்,  பாபுராஜ், வினய் ஃபோர்ட், ஷபரீஷ் வர்மா, கிருஷ்ண  சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். வருகிற ஓணம் பண்டிகையில் படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படம் மலையாளத்தில் வெளியாகும் அன்றே தமிழிலும் வெளியாகிறது.

Related Stories: