இமயமலையில் அஜீத் பைக் பயணம்

சென்னை: நடிகர் அஜீத் தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் பயணம் சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அஜீத் தற்போது தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். அதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதனை எச்.வினோத் இயக்கி வருகிறார். மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜீத் தனது நண்பர்களுடன் பைக் பயணம் சென்றுள்ளார்.

அந்த படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அவர் பைக்கில் ‘‘நெவர் எவர் கிவ் அப்”என்று எழுதியுள்ளார். இது விவேகம் படத்தில் அவர் பேசிய பன்ச் டயலாக் ஆகும். இந்த பயணத்தை அஜீத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள லே லடாக் பகுதியில் மேற்கொண்டுள்ளார். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானத்தில் லடாக் சென்ற அஜீத் அங்கிருந்து தனது மலைப்பாதை பைக் பயணத்தை தொடங்கி உள்ளார். நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

Related Stories: