திரிபோலி: வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஆட்சி செய்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான கிளர்ச்சி படை நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்கள் சர்வதேச ஆதரவு பெற்ற அரசுப் படையுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதம் தஜோரியின் கிளர்ச்சி படையினருக்கும் அப்தெல் கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சி படைக்கும் இடையே திரிபோலியில் நேற்று மோதல் வெடித்தது. பல்வேறு கிளர்ச்சி படை பிரிவுகளும் போரில் சேர்ந்து கொண்டுள்ளன. இதில் இதுவரை 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.