×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது

பெரம்பூர்: வட மாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரும் கும்பல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால் பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக போதைப் பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.அதன்படி, பெரம்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், எஸ்ஐ ராமதாய் உள்ளிட்ட தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் பெரம்பூர் ரயில் நிலையம் 2வது நடைமேடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தான்பூரில் இருந்து பெங்களூரூ செல்லும் விரைவு வண்டி பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றபோது அதில் பயணம் செய்த பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த ராஜு குமாரை (23) சோதனை செய்தபோது 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

கொளத்தூர் ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்த, கொளத்தூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்த திவாகரை (20) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.சென்னை சென்ட்ரலில் ரயில்வே உதவி ஆணையர் முத்துக்குமார், ஆய்வாளர் சசிகலா ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று அவுராவில் இருந்து வந்த அவுரா விரைவு ரயிலில் சோதனை நடத்தினர். அதில் 2 பேரின் பையில் 4 கிலோ போதை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில், பீகாரை சேர்ந்த அன்வர் அலாம் (28), மேற்கு வங்கத்தை சேர்ந்த ப்ரகார் (25) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Tags : Perambur ,North ,State , 10 kg ganja seized at Perambur railway station: North State youth arrested
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...