இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்: காதலன், நண்பர் கைது

பெரம்பூர்: பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘10ம் வகுப்பு படித்துவரும் எனது மகள் கடந்த 24ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளிக்கு சென்றார். இதன்பின்பு வீட்டுக்கு வரவில்லை,’ என்று தெரிவித்திருந்தார். இதன்படி, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 26வது தெருவை சேர்ந்த தீபக் (19) என்பவருடன் சிறுமி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் சிறுமியை தீபக் தனது நண்பர் வீட்டிற்கு செல்லும்படி திருவள்ளூருக்கு ரயிலில் ஏற்றிவிட்டு வந்துள்ளார். இதன்பிறகு சிறுமியை தீபக்கின் நண்பர் அம்பத்தூர் ஐசிஎப் காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) அழைத்துச் சென்று அவருக்கு தெரிந்தவர் வீட்டில் சிறுமியை தங்கவைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் தலைமையில் போலீசார் அம்பத்தூர் சென்று சிறுமியையும் அவருடன் இருந்த சதீஷ்குமாரையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர். இதில், சிறுமியை மிரட்டி அவரது காதலன் தீபக் மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கு வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குபதிவு செய்து விசாரித்து தீபக், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்.இதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, காதலன் தீபக் மற்றும் அவரது நண்பர் வெளியில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையதுத்து போக்சோ சட்டத்தில் அவர்கள் மீது வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: