கோப்ரா படத்துக்கு யு/ஏ

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விக்ரம் நடித்திருக்கும் படம், ‘கோப்ரா’. அவருடன் சேர்ந்து ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ள னர். ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷனுக்காக விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் படக்குழுவினர் கோவை, மதுரை, திருச்சி சென்று வந்தனர்.

இதை தொடர்ந்து தென்னிந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கான விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், இப்படம் வரும் 31ம் தேதி திரைக்கு வருவதால் சென்சாருக்கு சான்றிதழ் பெற அனுப்பப்பட்டது. இதில் ‘கோப்ரா’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வெளியூரில் இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில்  பங்கேற்ற விக்ரம்  பேசும்போது, ‘இப்படத்தின் இயக்குனர் அஜய்  ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிட வேண்டும் என்பதற்காக இறுதிகட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

அவருடைய இயக்கத்தில் வெளியான ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்கள் வித்தியாசமான திரைக்கதை, காட்சிகளுடன் வெளியானது. அதுபோல், ‘கோப்ரா’ படம் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.‌ நாம் வசிக்கும் இந்த பூமி மிகப்பெரியது. இதைப் பாதுகாக்கும் விஷயத்தில் எங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சொதப்பிவிட்டனர். இதை இன்றைய இளம் தலை முறையினரான நீங்கள் மிகப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புறச்சூழலில் உள்ள மாசுகளை அகற்றி, ஆரோக்கிய மாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். மாணவ, மாணவியரான உங்களுக்கு எந்தெந்த துறையில் அதிக விருப்பம் இருக்கிறதோ அதில் முழுமையான மனம் கொண்டு பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர்தான்’ என்றார்.

Related Stories: