×

யுஎஸ் ஓபனில் ஜோகோவிச் விளையாடாதது ஏமாற்றமளிக்கிறது: நடால் வருத்தம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நாளை  தொடங்குகிறது. இதில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா)   கொரோனா தடுப்பூசி சர்ச்சை காரணமாக பங்கேற்கவில்லை. ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் பங்கேற்றார். இந்நிலையில், தடுப்பூசி போடாததால்  அமெரிக்கா வர ஜோகோவிச்சுக்கு விசா கிடைக்கவில்லை. அதனால் நாளை தொடங்கும் யுஎஸ் ஓபனில் அவர் பங்கேற்றவில்லை.

இது குறித்து சக போட்டியாளரும், 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றருவமான ரபேல் நடால் (ஸ்பெயின்) நேற்று அளித்த பேட்டி ஒன்றில், ‘என்னைப் பொறுத்தவரையில்  ஜோகோவிச் விளையாடாதது, வருத்தமான செய்தி. உலகின் சிறந்த வீரர்கள் காயங்கள், அல்லது வேறு காரணங்களால் விளையாட முடியாமல் போவது துரதிர்ஷ்டவசமானது. நானும் காயம் உள்ளிட்ட காரணங்களல் முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

ஜோகோவிச் போன்ற சிறந்த வீரர்கள்  கிராண்ட் ஸ்லாம் போட்டியில் ஆடாதது ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் கடினமாகவே இருக்கும். ஏனென்றால், களத்தில் சிறந்த வீரர்கள் எதிரில் நிற்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அந்த வகையில் ஏமாற்றம்தான். ஆனால், ஒரு நல்ல செய்தி என்னவென்றால்  எனக்குப் பிறகும், ஜோகோவிச்சுக்குப் பிறகும், ரோஜர் பெடரருக்குப் பிறகும்  டென்னிஸ் இருக்கும், தொடரும்’ என்று கூறினார். ஜோகோவிச் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக ரஷ்ய நட்சத்திரம் டானில் மெட்வதேவும் தெரிவித்துள்ளார்.
 

Tags : Djokovic ,US Open ,Nadal , Djokovic not playing at US Open disappointing: Nadal upset
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!