எம்டிசியின் ஐடிஐயில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்: மேலாண் இயக்குனர் தகவல்

சென்னை: எம்டிசி ஐடிஐயில் சேர விண்ணப்பங்களை வரவேற்றுள்ளனர். எம்டிசி மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது: எம்டிசி சார்பில் 1984ம் ஆண்டு முதல் ஐடிஐ கம்மியர் (மோட்டர் வாகனம்) MECHANIC (Motor Vehicle) - MMV மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற National Council Vocational Trade (NCVT) குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது, 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பணியாளர்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடந்து வருகிறது. ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கால அளவு இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு “முதல்வர் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற் பயிற்சி நிலையம், மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண். 044-29535177 / கைபேசி எண். 9445030597 மற்றும் மின்னஞ்சல் மூலமாக mtciti591@gmail.comல் அணுகலாம். படிவத்தினை www.mtcbus.tn.gov.in >others>Download என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: