×

சென்னையில் ஒரு வாரத்தில் 13 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது; நடப்பாண்டில் 263 குற்றவாளிகள் கைது.! காவல்துறை தகவல்

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 13 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. நடப்பாண்டில் இதுவரை 263 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு. சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2022 முதல் 26.08.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 160  குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 68 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 25 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட  1 குற்றவாளி என மொத்தம்  263  குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 1.சதீஷ் (எ) ஒல்லி சதீஷ், வ/31, த/பெ.கணேசன்,  சீனிவாசபுரம் குடிசைப்பகுதி, பட்டினப்பாக்கம் என்பவர் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக E-1 மைலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவர்  E-1  மைலாப்பூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர்மீது 2 கொலை வழக்குகள், 15 திருட்டு வழக்குகள் உட்பட 20 குற்றவழக்குகள் உள்ளது. மேற்படி குற்றவாளி சதீஷ் (எ) ஒல்லி சதீஷ் என்பரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அவரை  குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க E-1 மைலாப்பூர்  காவல் நிலைய ஆய்வாளார், பரிந்துரை செய்ததின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 22.08.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் சதீஷ் (எ) ஒல்லி சதீஷ்  சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் 1.வெங்கடேசன் (எ) வெங்கட், வ/26, த/பெ.மணிவண்ணன், எண்.7 யமுனா தெரு, பாலாஜி நகர், இரும்புலியூர், கிழக்கு  தாம்பரம் 2.ரசூல், வ/27, த/பெ.முகமது அனிபா, எண்.50, இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை 3.உதயகுமார், வ/28, த/பெ.மணிவண்ணன், எண்.7, யமுனா தெரு, திலகவதி நகர், இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், 4.சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார், வ/23, த/பெ.லாசர், எண்.1, சதானந்தபுரம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சென்னை 5. சாருஹாசன் (எ) சாரு, வ/26, த/பெ.பாலு, எண்.7/336, புதுநகர், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் ஆகியோர் சேர்ந்து அண்ணாசாலை பகுதியில் வழிப்பறி செய்த குற்றத்திற்காக D-2 அண்ணாசாலை காவல்  நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

6.ராஜேஷ், வ/33, த/பெ.சத்தியேந்திரன், எண்.7/22, எஸ்.எஸ் கோயில் தெரு, சென்னீர்குப்பம், பூந்தமல்லி 7.சுரேஷ், வ/30, த/பெ.பாலன், எண்.104/33, பெசன்ட் நகர், கோமாதா நகர்,  திருவொற்றியூர், சென்னை  ஆகிய  இருவரும்  அண்ணாசாலை பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கி ரூ.20 லட்சத்தை பறித்த குற்றத்திற்காக  D-2  அண்ணாசாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  8.திலீப்குமார், வ/21, த/பெ. ராஜசேகர், எண்.32, முதல் குறுக்கு தெரு, தரமணி, மணலி, சென்னை 9.தீனா (எ) காக்கா தீனா, வ/23, த/பெ.ஏழுமலை, எண்.20,  முருகப்பா தெரு, சௌகார்பேட்டை,சென்னை ஆகிய இருவர் மீது கடந்த 28.07.2022 அன்று ரவி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக  C-1  பூக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் தீனா (எ) காக்கா  தீனா C-2  யானை கவுனி காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.  10.பால் பிரவீன், வ/28, த/பெ.ஆலன் மைக்கேல், எண்.23 பெருமாள் கோயில் முதல் தெரு, மாதவரம், சென்னை என்பவர் P-2 ஓட்டேரி  காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 7 வழக்குகள் உள்ள நிலையில்  மீண்டும் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  11.கிருஷ்ணமூர்த்தி (எ) மூர்த்தி, வ/32, த/பெ.முனியன், எண்.91 ஏ, பாடிக்குப்பம்  ரோடு, திருமங்கலம், சென்னை  என்பவர் மீது V-3  ஜெ.ஜெ.நகர் காவல்  நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது  5 வழக்குகள் உள்ள  நிலையில் மீண்டும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திலும்  12.மகேஷ் (எ)  டப்பா மகேஷ், வ/25,  த/பெ.கோதண்டம், எண்.127, காமராஜ் காலனி, தி.நகர், சென்னை என்பவர் மீது 4 வழக்குகள் உள்ள நிலையில், கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதற்காக R-1 மாம்பலம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வெங்கடேசன் (எ) வெங்கட், ரசூல், உதயகுமார், சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார், சாருஹாசன் (எ) சாரு, ராஜேஷ், சுரேஷ் ஆகிய 7 நபர்கள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க D-2  அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளரும், திலீப்குமார், தீனா (எ) காக்கா தீனா ஆகிய இருவரை   குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க C-1  பூக்கடை காவல் நிலைய ஆய்வாளரும்,  பால் பிரவீன் என்பவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க  P-2  ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளரும், கிருஷ்ணமூர்த்தி (எ) மூர்த்தி, என்பவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க v-3 JJ  நகர் காவல் நிலைய ஆய்வாளரும், மகேஷ் (எ) டப்பா மகேஷ், என்பவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க R-1  மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 26.08.2022 அன்று உத்தரவிட்டார்.  அதன்பேரில் 12 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 20.08.2022 முதல் 26.08.2022 வரையிலான ஒரு வார காலத்தில், 13 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக  வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 5 குற்றவாளிகள், மைலாப்பூர் காவல் மாவட்டத்தில் 4 குற்றவாளிகள், கொளத்தூர் காவல்  மாவட்டத்தில் 2 குற்றவாளிகள்,  பூக்கடை, கோயம்பேடு, அடையார் மற்றும் புனித தோமையர்மலை காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி  என மொத்தம் 15 குற்றவாளிகள் கடந்த 20.08.2022 முதல் 26.08.2022 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Chennai , 13 criminals arrested under Gangster Detention Act in one week in Chennai; 263 criminals arrested this year! Police information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...