அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஃபிபா அமைப்பு நீக்கியது..!

பாரிஸ்: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஃபிபா அமைப்பு நீக்கியது. இதனால், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு இந்தியாவில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனத்தில் தேவையற்ற மூன்றாம் தரப்பு தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கால்பந்து சங்கமான ஃபிபா இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு அண்மையில் தடை விதித்தது.

அக்டோபர் மாதத்தில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற திட்டமிட்டு ஆயத்த பணிகள் நடந்து வரக்கூடிய சூழலில் தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியை நடத்த முடியாத சூழல் உருவாகியிருப்பதை விளக்கி ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு நீக்கியது. ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 11 முதல் 30 வரை திட்டமிட்ட படி நடைபெறும் என்று  ஃபிபா அமைப்பு அறிவித்துள்ளது. 

Related Stories: