×

பிலிப்பைன்ஸ் பயணிகள் கப்பலில் திடிரென்று பற்றிய தீ: என்ஜினில் ஏற்பட்ட கோளாறே கரணம் என முதற்கட்ட தகவல்

மணிலா : 82 பேருடன் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் பயணிகள் கப்பலில் திடீரென்று பற்றிய தீ வானளவாக கொழுந்து விட்டு எரிந்தது. மீட்பு படையின் தீவிர முயற்சியால் இதுவரை 73 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கிறார்கள். பேட்டன் கேஸ் துறைமுகத்தில் இருந்து 82 பேருடன் கேளத்தன் துறைமுகத்திற்கு சென்ற பயணிகளின் கப்பலில் திடிரென்று கரும் புகை கிளம்பியது. இதனை பார்த்த பயணிகள் அலறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்தது பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பிறகு சம்ப இடத்திற்கு சென்ற கடற்படை வீரர்கள் கப்பலில் தவித்த 73 பயணிகளை பத்திரமாக மீட்டது. எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வானளாவு கொழுந்து விட்டு எறிந்த தீயில் எரிந்து உயிரிழப்பதை தடுக்க பலர் கடலில் குதித்தனர். அவர்களை மீட்பு பணியினர் படகுகள் மூலமாக மீட்டது. என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் வெளியாகி உள்ளது. விபத்திற்கான காரணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு என்று பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.     


Tags : Philippine , Philippines, ship, fire, on, engine, preliminary, information
× RELATED தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ்...