ஆவடி அருகே வீட்டில் பாலியல் தொழில்; புரோக்கர் கைது இளம்பெண்கள் மீட்பு

ஆவடி: ஆவடி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 பெண்களை மீட்டு மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் மல்லிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு  வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடியாக நுழைந்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 இளம் பெண்களை மீட்டனர்.  

இதனைத்தொடர்ந்து 2 இளம்பெண்களை மீட்டு மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (43) என்ற பாலியல் புரோக்கரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்து 2 இளம்பெண்களை மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: