பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி; பெண்கள் அணி முதலிடம்

புழல்: சோழவரம் ஒன்றியம் பூதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் சோழவரம், செங்குன்றம், காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகள் என, 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டியில் ஆர்வத்துடன்  கலந்துகொண்டனர்.

இப்போட்டிகளை  பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ரமணா ரெட்டி தொடங்கி வைத்தார். பூதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்சர் முன்னிலை வகித்தார்.  இப்போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் செய்திருந்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சேகர் கலந்து கொண்டார்.

பெண்களுக்கான  இறுதி போட்டியில் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியும்,   ஆண்கள் பிரிவில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த தனியார்  மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன. இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த அணிக்கு பரிசுகோப்பை  மற்றும் சான்றிதழ்கள் பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: