×

இந்தியாவுக்கு திரும்பி போங்கள் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: ‘அமெரிக்காவையே சீரழிக்கிறீர்கள். இந்தியாவுக்கு திரும்பி போங்கள்,’ என்று அவதூறாக பேசி, இந்திய பெண்களை அமெரிக்க பெண் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் இந்த நாட்டின் பல்வேறு முக்கிய பதவிகளில் உள்ளனர். இந்நாட்டை சேர்ந்த இனவெறியாளர்களுக்கு இது உறுத்தலாக இருக்கிறது. இந்தியர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள டலாஸ் நகரில், ஓட்டல் பார்க்கிங் பகுதியில் இதுபோன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது.

டலாஸ் நகரத்தில் உள்ள அந்த ஓட்டலில் இரவு உணவு அருந்திவிட்டு வெறியே வரும் 4 இந்திய அமெரிக்க பெண்களை நோக்கி, கையில் மொபைல் போனுடன் மெக்சிக்கோ அமெரிக்க பெண் ஒருவர் ஆவேசமாக வருகிறார். ‘இந்தியர்களை வெறுக்கிறேன். இந்தியர்கள் அனைவரும் சிறந்த வாழ்க்கையை தேடி அமெரிக்கா வருகின்றனர். எங்கு சென்றாலும் அங்கு எல்லாம் இந்தியர்கள் இருக்கிறீர்கள். இந்தியாவில் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றால், ஏன் இங்கே வந்து அமெரிக்காவை சீரழிக்கிறீர்கள்? இந்தியாவுக்கு திரும்பி போங்கள்,’ என்று வசைபாடினார். அதற்கு இந்திய பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், இந்திய பெண்களை தாக்கினார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதையடுத்து, இனவெறி தாக்குதல் நடத்திய எஸ்மெரல்டா அப்டன் என்ற அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இந்தியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : India ,America , India, racist attack on Indian women, US woman
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...