×

ஐஐடி சார்பில் புதிய இணையதளம்

சென்னை: சென்னை ஐஐடி.யில் படிக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் AskIITM.com என்ற இணையதளத்தை ஐஐடி.யின் முன்னாள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறுகையில், ‘‘ஐஐடியில் சேர விருப்பமுடைய மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சமூக வலைதளங்களுக்குச் சென்று தேடுகிறார்கள். ஆனால், அதில் கிடைக்கும் தகவல் அவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவலைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்று. தற்போது முன்னாள் மாணவர்கள் இந்த இணைய தளத்தினை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து கல்விக்கும் இது ஒரு தொடக்க பயணமாக அமையும். இந்த இணையதளம் மூலமாக இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அவர்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும். கேள்வி கேட்போருக்கான பதில் இ-மெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ வழங்கப்படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அந்த கேள்விகள் இடம்பெறும்’’ என்றார்.

Tags : IIT , New website by IIT
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...