×

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தத்தில் 12 கிராம மக்களை சந்திக்க பாமக சார்பில் 7 பேர் குழு அமைப்பு: பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதையொட்டிய  12 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்களின் கருத்துகளை அறிவதற்காக அவர்களின் பிரதிநிதிகளை நேற்று காஞ்சிபுரத்தில் நான் சந்தித்து பேசினேன். தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கக்கூடாது என்பதே அவர்களின் கருத்தாகும் என்று தெரிவித்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்தப்படவுள்ள 12 கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக  பா.ம.க. சார்பில் குழு அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அறிவித்து இருந்தேன். அதன்படி பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

குழுவின் விவரம்:
*   ஜி.கே.மணி - கவுரவத் தலைவர், பா.ம.க
*   திலகபாமா - பொருளாளர், பா.ம.க
*  ஏ.கே.மூர்த்தி - வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர், பா.ம.க.
*  வழக்கறிஞர் க.பாலு - செய்தித் தொடர்பாளர், பா.ம.க
*  பசுமைத் தாயகம் அருள் - தலைவர், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
*  பெ. மகேஷ் குமார் - மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் மேற்கு, பா.ம.க.
* அரிகிருஷ்ணன் - மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் கிழக்கு, பா.ம.க.

இந்தக் குழுவினர் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின்  கருத்துகளை கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில் தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Tags : BAMA ,Parantur Airport ,President ,Dr. ,Anbumani Ramadoss , A group of 7 people is organized on behalf of BAMA to meet 12 villagers on the issue of Parantur Airport: B.A.M.K. President Dr. Anbumani Ramadoss
× RELATED பரந்தூர் விமான நிலையத்திற்கு நில...