×

மேச்சேரி அருகே கனமழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி பலி

மேச்சேரி: மேச்சேரி அருகே மழையால் குடிசைவீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடி, ராக்கன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(60). இவரின் கணவர் செல்லன். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்லன் இறந்துவிட்டார்.

இதனால் கோவிந்தம்மாள் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனிடையே நேற்றிரவு மேச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில், கோவிந்தம்மாளின் செம்மண்ணால் ஆன குடிசை வீட்டின் சுவர் நனைந்து திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது சுவர் விழுந்துள்ளது இதில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக கோவிந்தம்மாள் உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேச்சேரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Macheri , An old woman died after the wall of her cottage collapsed due to heavy rains near Mecheri
× RELATED மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில்: மாசி மக பெரிய தேரோட்டம்