×

ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் ஐடி சோதனை நிறைவு

ஆம்பூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் ஐடி சோதனை நிறைவுபெற்றது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வருமானவரித்துறை பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்  கடந்த 23ம் தேதி ஃபரிதா குழுமத்திற்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை நடைபெற்றது. மேலும், ஃபரிதா குழுமம் தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. மட்டுமல்லாமல், வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்றது.

கடந்த 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளன. ஆனால் வருமானத்தை மறைத்து பலகோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வந்தது என தெரிவிக்கப்பட்டது. முதல் நாள் சோதனையில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 4வது நாளாக நடைபெற்று வந்த ஐடி சோதனையில், ஆம்பூர் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ண பிரசாத் தலைமையிலான 110 பேர் மேற்கொண்ட சோதனை இன்று நிறைவுபெற்றுள்ளது.


Tags : Farita Group ,Ampur , Ambur, Farida Group, ID Test, Completion
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...