×

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சுங்கச்சாவடி: 47 கி.மீ.க்குள் 2 சுங்கச்சாவடிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 47 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படுள்ள 2வது சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் காவல் கிணற்றிலிருந்து நெல்லை செல்லும் நன்கு வழிச்சாலை 70 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதில் நாகனேரியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து காவல் கிணறு அருகே குமாரபுரம் பகுதியை இணைக்கும் வகையில் புதிய நன்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாகமடம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்படுள்ளது. இதற்கும் நாகனேரி சுங்கச்சாவடிகும் இடையே உள்ள தூரம் 47 கிலோமீட்டர் ஆகும்.

ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி 60 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றபடும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக 47 கிலோமீட்டர் தூரத்தில் 2வது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், நன்கு வழிச்சாலை அமைப்பதன் நோக்கமே விரைவான போக்குவரத்து வசதிக்குத்தான் என்றும், இந்த 2 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நின்று செல்வதால் அந்த நோக்கமும் நிறைவேறாது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுங்கச்சாவடி அருகே உள்ள கிராமத்தினரும் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


Tags : Second subway ,Paddy National Highway , Paddy, second, toll booth, set up, public, protest
× RELATED நாகர்கோவில் – நெல்லை தேசிய...