×

மூன்றாண்டு ஒப்பந்தம் நான்காண்டாக மாற்றப்பட்டதை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை: மூன்றாண்டு ஒப்பந்தம் நான்காண்டாக மாற்றப்பட்டதை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டு காலமாக நடைபெறையில் இருந்து வந்த தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம், தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்றாண்டு ஒப்பந்தம் என்பதை நான்காண்டாக மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து எஐடியூசி, மற்றும் சிஐடியூ சங்கங்கள் சார்பில் மாநிலந்தழழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு.   சிஐடியூ மத்திய சங்க பொருளாளர் எஸ். ராமசாமி தலைமை வகித்தார் .ஏ ஐ டி யூ சி மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன் முன்னிலையில் வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்    சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, போக்குவரத்து ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர்   துரை. மதிவாணன், போக்குவரத்து சங்க      
சிஐடியூ நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கர் சௌந்தர்ராஜன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக வெங்கடேசன், எஐடியூசி போக்குவரத்து சங்க நிர்வாகிகள் மாணிக்கம், பாலசுப்பிரமணியன், மத்திய சங்கத் தலைவர் சேகர் ,கவுரவ தலைவர் கே.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
 
ஒப்பந்த காலம் நான்கு ஆண்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் மூன்று ஆண்டுகளே இருக்க வேண்டும்என வலியுறுத்தியும், நான்கு ஆண்டுகள் என்றால் மின்வாரியம் போன்று சம்பள நிலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதை அரசு ஏற்கவில்லை, ஓய்வுக்கால பண பலன்கள் 2020 மே மாதம் முதல் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பான அறிவிப்புகள்இல்லை, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆறு ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைத்துள்ளதை வழங்க உத்தரவாதம் ஏதும் அளிக்கவில்லை, ஒப்பந்த பிரிவுகளில் ஓய்வூதியர் சம்மந்தமான கோரிக்கைகள் இடம் பெறவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் ஏஐடியூசி ,சிஐடியூ சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை,இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர் களுக்கெதிரான ஒப்பந்தத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தஞ்சாவூர் கரந்தை பணிமனை முன்பு சிஐடியூ மத்திய சங்க தலைவர் காரல்மார்க்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Thanjana , Transport workers staged a demonstration in Tanjore to protest against the change of three-year contract to four years
× RELATED 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!