×

தாட்கோ மூலம் இலவசமாக ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்புக்கு பயிற்சி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தாட்கோ மூலம் மருத்துவம் சார்ந்த படிப்புக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி  மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக மெடிக்கல் கோடிங் டிரெயினிங் குறுகிய கால பயிற்சியாக அளித்து பல்வேறு மருத்துவ துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களாக இருக்க வேண்டும். இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில்  மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம்  இணையதளம்  வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டண தொகை ரூ.15,000 தாட்கோ வழங்கும். பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு ஐஎஸ்ஓ தரத்துடன்  கூடிய  சான்றிதழ் அளிக்கப்படும்.

மேலும் பயிற்சியில் தேர்ந்த மாணவர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் 100 சதவீதம்  மருத்துவ துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். வேலையில் சேர்ந்து  6  மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்த படியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம். ஆரம்ப கால  மாத ஊதியமாக ரூ12,000 முதல் ரூ,15,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு  ரூ,50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத  ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  என்ற முகவரியில் பதிவு மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dravidian ,TADCO , Free Coaching by TADCO, Adi Dravidian Students, Coaching for Medical Courses
× RELATED வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும்...